கிழக்கு மாகாணத்திலுள்ள அரச திணைக்களங்களின் அதிகாரிகளுக்கான செயலமர்வொன்றினை இலங்கையிலுள்ள சுவிட்சலாந்து நாட்டு உயர்ஸ்த்தானிகர் ஆரம்பித்து வைப்பு

0
111

(விசேட நிருபர்) 

17ed70c8-89d3-46b7-9e17-b1cdd01f8f81கிழக்கு மாகாணத்திலுள்ள அரச திணைக்களங்களின் அதிகாரிகளுக்கான செயலமர்வொன்றினை இலங்கையிலுள்ள சுவிட்சலாந்து நாட்டு உயர்ஸ்த்தானிகர் ஹிம்ஸ்வெயின் வேர்க்கர் வியாழக்கிழமை (9.6.2016) ஆரம்பித்து வைத்தார்.

திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் அலுவலகத்தில் இந்த செயலமர்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்திலுள்ள அரச திணைக்களங்களின் செயலாளர்கள் மற்றும் ஆணையாளர்கள் உயரதிகள் என 100 பேர் இந்த செயலமர்வில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த செயலமர்வின் ஆரம்ப வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் நசீர் அகமட், மற்றும் கிழக்கு மாகாண சபையின் பிரதி பிரதம செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நேற்று  வியாழக்கிழமை ஆரம்பமான இச் செயலமர்வு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

4b95dabd-bc5a-4f41-a925-414ed388b91b

LEAVE A REPLY