மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் 41 பாசடாலைகளுக்கு அதிபர்கள் வெற்றிடம்

0
183

9e4eec04-7ef1-49cf-aa8b-47a6121d4e11(விசேட நிருபர்)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் 41 பாசடாலைகளுக்கு அதிபர்கள் வெற்றிடம் காணப்படுவதாக மட்டக்களப்பு மத்தி வலய கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சேகு அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் 17 பாடசாலைகளுக்கும், கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) கல்விக் கட்டத்தில் 15 பாடசாலைகளுக்கும், ஏறாவூர் கல்விக் கோட்டத்தில் 9 பாடசாலைகளுக்கும் அதிபர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

இதில் அன்மையில் நடைபெற்ற அதிபர் பரீட்சையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் 26பேர் சித்தியடைந்துள்ளனர்.

இவர்களில் காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் 4 அதிபர்ளும், கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) கல்விக் கட்டத்தில் 17 அதிபர்களும், ஏறாவூர் கல்விக் கோட்டத்தில் 5 அதிபர்களும் பரீட்சையில் சித்தியடைந்து தற்போது பயிற்சி செயலமர்வில் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்கள் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் அதிபர் வெற்றிடமாகவுள்ள 41 பாசடாலைகளில் 26 பாடசாலைகளுக்கு 26 பேர் புதிய அதிபர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

புதிய அதிபர்கள் இப்பாசடாலைகளுக்கு நியமிக்கப்படுவார்களாயின் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள 15 பாடசாலைகளுக்கு 15 அதிபர் வெற்றிடங்கள் காணப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

அதிபர் வெற்றிடமாகவுள்ள பாடசாலைகளில் தற்போது ஆசிரியர் தரத்திலுள்ளவர்களே அதிபர்களாக உள்ளனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY