தாலிக் கொடியை அறுத்த திருடன் வசமாக மாட்டினான்; மற்றுமொருவன் தப்பியோட்டம்

0
189

(வாழைச்சேனை நிருபர்)

15வாகரை பிரதேசத்தில் வைத்து பெண்ணின் தாலிக் கொடியை அறுத்துக் கொண்டு தப்பியோடிய இரண்டு பேரில் ஒருவரை வாழைச்சேனை பொலிஸார் நேற்று முன்தினம் (08) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எச்.எம்.ஏ.எஸ்.ஹேரத் தெரிவித்தார்.

வாகரை வம்மிவட்டுவான் பிரதேசத்தை சேர்ந்த குடும்ப பெண் தனது எட்டு மாத குழந்தையுடன் உறவினர் ஒருவரது வீட்டுக்குச் செல்லும் வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் பெண்ணின் தாலிக் கொடியை அறுத்துக் கொண்டு சென்றுள்ளனர் இதனையடுத்து குறித்த பெண் சத்தம் போட்டு பிரதேச மக்களின் உதவியுடன் திருடர்களைத் துரத்திய போது அவர்கள் தப்பி சென்றுள்ளனர்.

14வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து உதவி பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.அருனகாந், பொலிஸ் உத்தியோகத்தர்கலான எம்.பி.எம்.தாஹா, எம்.டபள்யூ.தினுச, எச்.எம்.அஜித் ஆகியோர்கள் அடங்கிய பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட தேடுதலின் போது ரிதிதென்ன பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளையும் ஒரு திருடனையும் கைது செய்துள்ளதுடன் மற்றயவர் தப்பி ஓடிவிட்டதாகவும் அவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இரண்டு சந்தேகநபர்களும் பல குற்றச்சாட்டுக்களில் தேடி வந்த குற்றவாளிகள் என்று வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்துள்ள சந்தேக நபரிடம் இருந்து முப்பத்தாறு கிராம் எடையுடைய தாலிக்கொடியையும் திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் வாழைச்சேனை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் இன்று வாழைச்சேனை நிதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் நேற்று (09) ஆஜர்படுத்தியபோது சந்தேக நபரை எதிர்வரும் 23.06.2016ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

18

LEAVE A REPLY