மீண்டும் உபுல் தரங்க, பர்விஸ் மஹ்ரூப்: ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

0
112

Ball Test Cricketஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடரை ஏற்கனவே இலங்கை 2-0 என இழந்துள்ள நிலையில், 3வது மற்றும் கடைசி டெஸ்டில் இன்று ஆடுகிறது. இதில் ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணி உள்ளது.

இதைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் எதிர்வரும் 16ம் திகதி தொடங்குகிறது.

இந்த தொடருக்கான அணியில் உபுல் தரங்க, பர்விஸ் மஹ்ரூப், தனுஷ்க குணதிலக்க, சீக்குகே பிரசன்ன மற்றும் சுராஜ் ரந்திவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அணி விபரம்:-

மேத்யூஸ் (அணித்தலைவர்), தினேஷ் சந்திமால் (துணைத் தலைவர்), குஷால் பெரேரா, தனுஷ்க குணதிலக்க, உபுல் தரங்க, குஷால் மெண்டிஸ், லஹிரு திரிமன்னே, தனன்ஜெய டி சில்வா, சீக்குகே பிரசன்ன, சுராஜ் ரந்திவ், தசன் சனக, பர்விஸ் மஹ்ரூப், நுவன் பிரதீப், சுரங்க லக்மல், சமிந்த பன்டார, சமிந்த எரங்க.

LEAVE A REPLY