பிரேசிலில் பஸ் பள்ளத்தாக்கில் விழுந்ததில் மாணவர்கள் உள்பட 15 பேர் பலி

0
124

201606091708449876_Bus-plunges-into-ravine-in-Brazil-at-least-15-killed_SECVPFபிரேசில் நாட்டின் மோகி தாஸ் குருசெஸ் நகரத்தில் இருந்து மூன்று பள்ளிக்கூட மாணவர்களை உள்பட பலரை சுமந்து கொண்டு பஸ் ஒன்று கடற்கரை பகுதி நகரான சயோ செபஸ்டியானோ நகருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு வளைவில் டிரைவர் பஸ்சை திருப்ப முயன்றார்.

அப்போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டு பெரிய பாறாங்கல் மீது மோதியது. இதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் பள்ளி மாணவர்கள் ஆவார்கள்.

பிரேசில் நாட்டில் ஒவ்வொரு வருடமும் 43 ஆயிரம் பேர் சாலை விபத்தில் பலியாகி வருகின்றனர். 2002-2012-ஐ காட்டிலும் இது 24 சதவீதம் அதிகம். பிரேசில் நாட்டில் பொருளாதார சூழ்நிலை சரியில்லாத காலத்திலும் ஒரு நாளைக்கு சுமார் 10 ஆயிரம் புதிய கார்கள் இறக்குமதியாகி கொண்டே இருந்தனர்.

கடந்த வருடம் மார்ச் மாதம் பள்ளத்தாக்கில் பஸ் உருண்டு விழுந்த விபத்தில் 54 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY