உணவு விடுதி உரிமையாளர்களக்கு சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விழிப்புணர்வு

0
154

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

eb9297e8-f3b3-40fe-9342-61ac8f1a3f41மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள உணவுக்கடை உரிமையாளர்களுக்கு சுகாதார நடைமுகைள் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வென்று வியாழக் கிழமை (ஜுன் 09, 2016) போரதீவுப்பற்று பிரதேச கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது.

போரதீவுப்பற்று பிரதேச சபை ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் அப்பிரதேசத்திலுள்ள உணவுக்கடை;, சிற்றுண்டிக்கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட சுமார் 40 இற்கு மேற்பட்டடோர் கலந்து கொண்டிருந்தனர்.
இவ்வேளையில் போரதீவுப் பற்றுப் பிராந்திய பொது சுகாதார வைத்திய அதிகாரி வி. குணராசசேகரம் கலந்து கொண்டு விளக்கங்களை வழங்கினார்.

உணவு வகைகளை எவ்வாறு சுத்தமாக பேணுதல், கையாளுதல், பத்திரப்படுத்தல், வினியோகித்தல், மற்றும், சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பேணுதல், போன்ற பல விடயங்கள் தொடர்பில் விளக்கங்கள் வழங்கப்பட்டன.

மேலும் போரதீவுப்பற்று பிரதேச சபைச செயலாளர் கே. தவராசா, பிரதேச சனசமூக உத்தியோகஸ்தர் ம. கருணாநிதி, மற்றும் போரதீவுப் பற்று பொது சுகாதார வைத்திய அலுவலகத்தில் கடமை புரியும் பொது சுகாதார பரிசோதகர்களும் இந்நகிழ்வில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கினர்.

1cbccefd-f648-4c1c-bed4-1e6df2845b8f

5bf0b40c-c704-43fa-b1ba-db5ed9d4bbec

9a002302-55c0-468e-beb8-87943a9d4fd0

LEAVE A REPLY