நீண்ட நேரம் நோன்பு பிடிப்பது இந்த நாட்டு முஸ்லிம்கள் தான்?

0
134

coltkn-06-09-fr-03161841141_4390126_08062016_mss_cmyஇம்முறை ரமழான் மாதத்தில் டென்மார்க் மற்றும் சுவீடன் முஸ்லிம்கள் நீண்ட நேரம் நோன்பு நோற்பதோடு ஆர்ஜன்டீனா மற்றும் அவுஸ்திரேய மக்கள் குறைந்த காலம் நோன்பு பிடிக்கின்றனர்.

உலகெங்கும் நோன்பு பிடிப்பது தொடர்பான வரைபட தரவுகளின்படி டென்மார்க் முஸ்லிம்களின் நோன்பு நோற்கும் காலம் அதிகபட்சமாக 21 மணி நேரங்களாகும். அதேவேளை ஆர்ஜன்டீனாவில் குறைந்த நேரமாக 9 மணி மற்றும் 30 நிமிடங்கள் நோற்க வேண்டும்.

இந்த சர்வதேச வரைபட தரவுகளின்படி நீண்ட நேரம் நோன்பி பிடிக்கும் நாடுகளில் ஐஸ்லாந்து, சுவீடன் மற்றும் நோர்வேயும் உள்ளடங்குகின்றன.

இந்த நாடுகளில் சுமார் 20 மணி நேரம் நோன்பு பிடிக்க வேண்டும்.

இந்திய துணைக்கண்டம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நடுநிலையான காலம் நோன்பு பிடிக்கும் காலமாக உள்ளது.

இங்கு குறைந்த பட்சம் 14 மணி நேரமும் அதிக பட்சம் பதினாறரை மணி நேரமும் நோன்பு பிடிக்கின்றனர்.

LEAVE A REPLY