இஸ்ரேலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் பலி

0
132

Isreal gunfire_CIஇஸ்ரேலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் டெல் அவீவில் உணவு விடுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு பாலஸ்தீனிய துப்பாக்கிதாரிகள் இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளனர். தாக்குதலில் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர்களை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பலஸ்தீனத்தின் யாட்டா என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்களே தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது ஓர் மிலேச்சத்தனமாக செயல் எனவும் பயங்கரவாதத்தை அனுமதிக்க முடியாது எனவும் பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாகூ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY