அமைதி நாடுகள் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடம்

0
132

201606090150198040_India-ranks-low-at-141st-place-in-global-peace-index_SECVPFஅமைதியான நாடுகள் குறித்த பட்டியலை ஆண்டுதோறும் உலக பொருளாதார மற்றும் அமைதி நிறுவனம் வெளியிட்டு வருகிறது. நேற்று வெளியிடப்பட்ட 2015-ம் ஆண்டுக்கான பட்டியலில் 163 நாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு இருந்தன.

தெற்காசிய நாடுகளில் பாகிஸ்தானுக்கு 153-வது இடமும், ஆப்கானிஸ்தானுக்கு 160-வது இடமும் கிடைத்து இருக்கிறது. தெற்காசியாவில் சிறந்த இடத்தை (13) பூடான் பிடித்தது.

அமைதி மிகவும் குறைந்த நாடாக உள்நாட்டு போர் நடக்கும் சிரியா உள்ளது. அந்த நாடு கடைசி இடத்தை(163) பிடித்தது. சோமாலியா(159), ஈராக்(161), தெற்கு சூடான்(162) ஆகிய நாடுகளும் பின்வரிசையில் உள்ளன.

மிகவும் அமைதியான நாடு என்ற பெருமையை ஐஸ்லாந்து தட்டிச் சென்றது. அந்த நாட்டுக்கு முதலிடமும், டென்மார்க்கிற்கு 2-வது இடமும், ஆஸ்திரியாவுக்கு 3-வது இடமும் கிடைத்தன.

LEAVE A REPLY