(Photos) தென் கிழக்கு பல்கலைக்கழக “யூனிவசிட்டி மஸ்ஜித்” இன்று நிருவாகத்திடம் கையளிப்பு

0
46

souteastern-university-Oluvil hira foundationஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஸன் தலைவரும் மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ்வின் அயராத முயற்சியினால் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவ மாணவிகளின் நன்மைகருதி வளாகத்தில் மிகவும் அழகான முறையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட “யூனிவசிட்டி மஸ்ஜித்” தொழுகைக்காக இன்று (09) வியாழக்கிழமை ளுஹர் தொழுகையுடன் பல்கலைக்கழக நிருவாகத்தினரிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட உள்ளது.

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஸன் பிரதித்தலைவர் பொறியியலாளர் ஹிறாஸ் அஹமட், ஹிஸ்புழ்ழாஹ் தலைமையிலான சவூதி அரேபிய பிரதிநிதிகளும் பௌண்டேஸன் செயலாளர் நாயகம் ஏ.எல.எம். மும்தாஸ் மதனி, உபவேந்தர் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

University Masjid - Oluvil SEUSL 7 University Masjid - Oluvil SEUSL 6 University Masjid - Oluvil SEUSL 5 University Masjid - Oluvil SEUSL 4 University Masjid - Oluvil SEUSL 3 University Masjid - Oluvil SEUSL 2 University Masjid - Oluvil SEUSL 1

LEAVE A REPLY