சிரியாவில் வாழுக்கின்ற எமது உள்ளங்களுக்காக பிரார்த்திப்போம்!

0
190

(அஹமட் இர்ஷாட்)

04புனித ரமழான் மாதத்திலும் சிரியாவில் உக்கிர போர் தொடர்கிறது. நேற்று அலோப்போவில் கூட்டுப்படைகள் மேற்கொண்ட தாக்குதல்கள்களில் 15 பேர்வரை பலியாகியுள்ளனர்.

எங்களுடைய துஆக்கள் மிகக்கட்டாயமாக இப்புனித மாதத்தில் சிரியாவில் வாழுகின்ற எமது சகோதரங்களுக்காக இருக்க வேண்டும்.

கிளர்ச்சியாளர்களின் பிடியுள்ள அலெப்போ நகரப் பகுதிகளுக்குச் செல்லும் பாதையில், இந்த மாதத்தில் நடத்தப்பட்டதில் மிக அதிகமான விமானத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக சிரியாவின் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

02இந்த தாக்குதலில் ரஷியா மற்றும் சிரியா அரசின் போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், இது பற்றிய அதிகார பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

கடந்த வாரங்களில் அலெப்போவிலுள்ள கிளர்ச்சியாளர்களின் பகுதிகளில் சிரியாவின் அரசு அவ்வப்போது குண்டு மழை பொழிந்து வந்திருக்கிறது. இந்த தாக்குதல்கள் பெப்ரவரி மாதத்தின் இறுதியில் போர் முடிவிற்கு கொண்டுவரப்படும் என ஒத்துக்கொள்ளப்பட்ட பகுதி இப்பொழுது புனித ரமழான் மாதம் என்றும் கருத்தில் கொள்ளாமல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முற்றாக மீறி அப்பாவி மக்களை பழிகாடாக்கி வருக்கின்றது.

உலக முஸ்லிம்காளாகிய நாம் சிரியாவில் இப்புனித மாதத்தில் சிரியாவில் உயிருக்காய் போராடிக்கொண்டிருக்கும் எமது சகோதரர்களுக்காக அல்லாஹ்விடத்தில் வேண்டிக்கொள்வதை தவிர வேறு ஆயுதங்கள் ஒன்றும் எங்களிடத்தில் இல்லை என்பதே நிதர்சனம்.

03 assa

LEAVE A REPLY