ஊக்க மருந்து பயன்பாடு: ஷெரபோவா சஸ்பென்ட்

0
181

Sharapova tennisமெல்டொனியம் என்ற ஊக்க மருந்து சோதனையில் தோற்றதால், ரஷ்யாவின் டென்னிஸ் நட்சத்திரமான மரியா ஷெரபோவா இரண்டு வருடம் போட்டிகளில் பங்கேற்பதிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் 29 வயதான ஷெரபோவா, சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு விதித்த்தாக அவர் கூறும், “நியாயமற்ற கடுமையான தடை”க்கு எதிராக மேல் முறையீடு செய்யப்போவதாக கூறியுள்ளார்.

ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் ஊக்க மருந்து சோதனையில் தோற்றதாக அவர் அறிவித்தபோது, ஷெரபோவா தற்காலிகமாக மார்ச் மாதம் இடை நீக்கம் செய்யப்பட்டார்.

அவர் மருத்துவ காரணங்களுக்காக மெல்டோனியத்தை எடுத்துக்கொண்டதாக தெரிவித்திருந்தார்.

ஷெரபோவா ஆகஸ்ட் மாதம் நடக்கவுள்ள ரியோ ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய டென்னிஸ் குழுவில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY