இலங்கையை முஸ்லிம் நாடாக அடையாளப்படுத்த கடும் முயற்சி: சிங்ஹலே அமைப்பு குற்றச்சாட்டு

0
230

sinhaleமுஸ்­லிம்கள் இலங்­கையில் பள்­ளி­வா­சல்­களின் கோபு­ரங்­களை (மினாரா) உய­ர­மாக நிறுவி இலங்கை ஓர் முஸ்லிம் நாடு என சர்­வ­தே­சத்­துக்கு அடை­யா­ளப்­ப­டுத்த திட்­ட­மிட்டு செயற்­ப­டு­கி­றார்கள்.

கண்டி லைன் பள்­ளி­வா­சலின் கோபுர நிர்­மாணம் இதற்கு உதா­ர­ண­மாகும் என சிங்­ஹலே அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கண்டி லைன் பள்­ளி­வா­சலில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் மினா­ரா­வுக்கு எதிர்ப்பு தெரி­வித்து சிங்­ஹலே பொது­ப­ல­சேனா உட்­பட பல அமைப்­பு­களைச் சேர்ந்த தேரர்­களும் பொது மக்­களும் ஆர்ப்­பாட்­ட­மொன்­றினை நடாத்­தினர்.

மினாரா நிர்­மா­ணத்தை உடன் நிறுத்­தும்­படி கோஷங்கள் எழுப்­பினர். எதிர்ப்பு ஆரப்­பாட்டம் தொடர்பில் கருத்து ஊடகங்களுக்கு வெளி­யி­டு­கை­யிலே சிங்­ஹலே அமைப்பின் செய­லாளர் மெதில்லே பஞ்­சா­லோக தேரர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், கண்டி நகரில் அமைந்­துள்ள தலதா மாளி­காவ உலக மர­பு­ரிமைச் சின்­ன­மாகும். தலதா மாளி­காவின் உய­ரத்­தினை விடவும் பள்­ளி­வா­சலின் கோபுரம் உய­ர­மாக அமைப்­ப­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

இதனை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. இத­னா­லேயே நாம் இதனை எதிர்க்­கிறோம். இந்தக் கோபுரம் அமைப்­ப­தற்­கான சட்­ட­ரீ­தி­யான அனு­ம­தியும் பெற்றுக் கொள்­ளப்­ப­ட­வில்லை.

மகா­நா­யக்க தேரர்­களும் மக்­களும் இதனை விரும்­ப­வில்லை. கண்டி மாநகர விசேட ஆணை­யாளர் நிர்­மா­ணப்­ப­ணி­களை நிறுத்­தி­யுள்ளார்.

என்­றாலும் சில­வேளை சிறிது கால இடை­வெ­ளியின் பின்பு மீண்டும் கோபுரம் அமைக்கும் பணிகள் ஆரம்­பிக்­கப்­ப­டலாம். அதனால் சிங்­ஹலே அமைப்பு இது­வி­ட­யத்தில் எதிர்­கா­லத்தில் அவ­தா­னத்­துடன் இருக்கும்.

இது­வி­ட­ய­மாக நாம் மகா­நா­யக்க தேரர்கள், கண்டி நகர மக்கள், வர்த்­த­கர்கள் அனை­வ­ரையும் தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளோம். தலதா மாளி­கை­யி­லி­ருந்தும் 200 மீற்றர் தூரத்­தி­லேயே இந்தப் பள்­ளி­வாசல் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது.

நாட்டில் பௌத்த மத தலங்­க­ளுக்கு அருகில் உய­ர­மாக பள்­ளி­வா­சல்கள் நிர்மாணிக்கப்படுவதாலே பிரச்சினைகள் எழுகின்றன.

இவ்வாறான செயற்பாடுகள் பௌத்த நாட்டை ஒரு முஸ்லிம் நாடாக சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டும் முயற்சி என்றே சிங்ஹலே கருதுகிறது என்றார்.

#Vidivelli

LEAVE A REPLY