கிரீஸில் அகதிகள் ஆர்ப்பாட்டம்:கூடாரங்களுக்குத் தீவைப்பு

0
127

201604270910166089_massive-fire-broke-out-at-Visakhapatnam-Biomax-Fuels-Limited_SECVPFகிரீஸின் சையோஸ் தீவில் அகதிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த கூடாரங்களை தீவைத்துக் கொளுத்தினர்.

இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:

சையோஸ் தீவில் அமைந்துள்ள செளடா முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த அகதிகள், கிரீஸில் புகலிடம் கேட்டு தாங்கள் அளித்த மனுவைப் பரிசீலிப்பதில் காலதாமதம் ஆவதாகக் கூறி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த ஆர்ப்பாட்டத்தின்போது இரண்டு பெரிய கூடாரங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன என்று போலீஸ் வட்டாரங்கள் கூறின.

போரால் பாதிக்கப்பட்ட சிரியா, இராக் போன்ற நாடுகளிலிருந்து புதிய வாழ்வு தேடி ஆயிரக்கணக்கான அகதிகள் துருக்கி வந்து, அங்கிருந்து கிரீஸ் வழியாக மேற்கு ஐரோப்பா செல்ல முயற்சித்து வருகின்றனர்.

அவர்களில் சுமார் 8,500 பேர் கிரீஸ் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய யூனியனும், துருக்கியும் அண்மையில் மேற்கொண்ட ஒப்பந்தமானது, மார்ச் 20-ஆம் தேதிக்குப் பிறகு கிரீஸ் வந்த அகதிகள் அங்கிருந்து பிற ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதைத் தடை செய்கிறது.

மேலும் அவர்களை மீண்டும் துருக்கிக்கு அனுப்பவும் வகை செய்கிறது. இதையடுத்து, துருக்கிக்குத் திருப்பி அனுப்பப்படுவதைத் தவிர்ப்பதற்காக, கிரீஸ் நாட்டிலேயே தஞ்சம் கேட்டு ஏராளமான அகதிகள் விண்ணப்பித்துள்ளனர்.

அளவுக்கு அதிகமாகக் குவிந்துள்ள இந்த விண்ணப்பங்களைப் பரிசீலிக்க கிரீஸ் அதிகாரிகள் திணறி வருவதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY