சவூதியில் விபத்து: 15 பேர் பலி, 60 பேர் காயம்

0
134

saudi-759சவூதி அரேபியாவில் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து செஞ்சிலுவைச் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா அல்-மொரீபித் கூறியதாவது:

தலைநகர் ரியாத் மற்றும் அல்-காசிம் இடையேயான நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை இந்த விபத்து நிகழ்ந்தது. பேருந்தும், லாரியும் மோதிக் கொண்டதில் பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது.

இச்சம்பவத்தில், 15 பேர் பலியாகினர். மேலும், 60 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 5 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றார் அவர்.

விபத்துக்கான காரணம், உயிரிழந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த தகவல்களை அவர் தெரிவிக்கவில்லை.

LEAVE A REPLY