இருதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் நவாஸ் ஷெரீஃப்

0
151

nawazஅவசர இருதய சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் ஓய்வெடுத்து வந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பூரண நலன் பெற்று வீடு திரும்பினார்.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள தனது குடும்பத்தினரைக் காண நவாஸ் ஷெரீஃப் கடந்த மாதம் அங்கு சென்றார். அப்போது வழக்கமான உடல்நலப் பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றார்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு கூறினர்.

இதைத் தொடர்ந்து, கடந்த மே 31-ஆம் தேதி அவருக்கு லண்டன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

கடந்த ஒரு வார காலமாக மருத்துவமனையில் ஓய்வெடுத்து வந்த அவர், பூரண நலம் பெற்றதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, மருத்துவமனையிலிருந்து செவ்வாய்க்கிழமை வெளியேறிய அவர், லண்டனில் உள்ள அவரது மகள் மரியம் நவாஸின் வீட்டுக்கு வந்தார்.

நவாஸ் ஷெரீஃபின் மனைவி குல்ஸும் நவாஸ், மகன்கள் ஹஸன், ஹுசேன் ஆகியோர் அவரை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

வீடு வந்து சேர்ந்த நவாஸ் ஷெரீஃப் நலமாக உள்ளார் என்று மகள் மரியம் நவாஸ் தெரிவித்தார்.

அறுவை சிகிச்சைக்கு முன்னதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் நவாஸ் ஷெரீஃப் விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்துச் செய்தி வெளியிட்டனர்.

சிகிச்சைக்கு முன் நவாஸ் ஷெரீஃப், இந்திய பிரதமர் மோடியுடன் மட்டும் தொலைபேசியில் பேசி, அவரது வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்தார்.

LEAVE A REPLY