வளைந்து கொடுக்கக் கூடிய தொடுதிரை: Samsung-ன் புதிய ஸ்மார்ட் போன்

0
144

samsung-is-reportedly-working-on-a-phone-with-a-crazy-flexible-screen-that-bends-and-folds-and-it-could-launch-in-januaryமடக்கக்கூடிய மற்றும் வளைந்து கொடுக்கக் கூடிய தொடுதிரையை கொண்ட ஸ்மார்ட் போன்களை Samsung அடுத்த வருடம் வெளியிட உள்ளது.

சமீபத்திய தகவலின் படி, முன்னணி மொபைல் நிறுவனமான Samsung புதிய மைல்கல்லாக வளைந்து கொடுக்கக் கூடிய தொடுதிரையைக் கொண்ட 2 ஸ்மார்ட் போன்களை அடுத்த வருடம் வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு மொபைல்களில் ஒன்று இரண்டாக மடித்துக் கொள்ளும் வகையிலும், மற்றொன்று தொடுதிரை நன்றாக வளைந்து கொடுக்கும் படியும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இரு போன்களுமே 5 இன்ஞ் OLED தொடுதிரையை கொண்டுள்ளன. இவை வளைந்து கொடுக்கும் போது 8 இன்ஞ் வரை அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பயனர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கவிருக்கும் இந்த புதிய ஸ்மார்ட் போன்கள் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் நடக்கும் Mobile World Congress 2017ல் அதிகாரப்பூர்வமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY