ஊக்கமருந்து விவகாரம்: மரியா ஷரபோவாவிற்கு இரண்டு ஆண்டுகள் தடை

0
162

201606082149404405_Maria-Sharapova-Gets-Two-Year-Tennis-Ban-After-Drug-Test_SECVPFபெண்கள் டென்னிசில் கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் ரஷியாவின் மரியா ஷரபோவா. இவர் டென்னிஸ் அதிக அளவு சாதிக்காவிட்டாலும் விளம்பரங்கள் மூலம் பணங்களை வாரிக்குவித்து வருகிறார். உலகஅளவில் அதிக பணம் சம்பாதிக்கும் வீராங்கனை என்ற பெயரை கடந்த சில வருடங்களை தக்க வைத்துக்கொண்டிருந்தார்.

இவர் இந்த வருட தொடக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் ஊக்கமருந்து சோதனைக்கான மாதிரி எடுக்கப்பட்டது. அந்த மாதிரியில் தடை செய்யப்பட்ட மெல்டோனியம் என்ற மருந்தை பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டது. இதுகுறித்து சர்வதேச டென்னிஸ் பெடரேஷன் ஊக்கமருந்து தடுப்புப்பிரிவு விசாரணை மேற்கொண்டது. அதன் இறுதியில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஷியா அணி சார்பில் அவர் ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்வது கேள்விக்குறியாகியுள்ளது.

இதற்கிடையே நான் மெல்டோனியத்தை கடந்த 10 வருடமாக பயன்படுத்தி வருகிறார் என்று கூறியிருந்த மரியா, இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருக்கிறேன் என்று தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மரியா ஷரபோவா ஊக்கமருந்து பயன்படுத்தியதாக செய்தி வெளியான உடனேயே பெரும்பாலான ஸ்பான்சர்கள் அவரை விட்டு விலகின. இதனால் அதிக சம்பளம் வாங்கும் வீராங்கனை என்ற பெருமையை இழந்தார். அதை செரீனா தக்கவைத்து கொண்டார். டென்னிஸ் மூலம் இதுவரை 36 மில்லர் டாலர் சம்பாதித்துள்ளார்.

LEAVE A REPLY