காத்தான்குடி சிறுமி சூடு விவகாரம்: வளர்ப்புத்தாயும் பிணையில் விடுதலை

0
18

(விஷெட நிருபர்)

Majeed Rabbani Mumthaj Yusriகாத்தான்குடியில் சிறுமியொருவருக்கு சூடு வைத்த சம்பவம் தொடர்பில் பிணை எடுப்பதற்கு எவரும் முன்வராமல் விளக்க மறியலில் தொடர்ந்து இருந்து வந்த சிறுமியின் வளர்ப்புத்தாய் நேற்று (07) பிணையில் விடுதலையாகியதாக மட்டக்களப்பு சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

காத்தான்குடியில் சிறுமியொருவருக்கு சூடு வைத்த சம்பவம் தொடர்பில் விளக்க மறியலில் இருந்து வந்த சிறுமியின் வளர்ப்புத்தாய் மற்றும் சிறுமியின் தந்தை ஆகிய இருவருக்கும் (24.5.2016) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் குறித்த சிறுமியின் தந்தை அன்றைய தினமே பிணையில் விடுதலையானார்.

இவ்விருவரையும் தலா ஒருவருக்கு 25000 ரூபா பணமும் தலா ஒருவருக்கு நான்கு பேர் சரீரப்பிணையிலும் பிணையில் செல்ல மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.

இவர்களின் பிணைக்காக நான்கு பேர் சரீரப்பிணை வழங்குவதுடன் அதில் இருவர் அரசாங்க உத்தியோகத்தர்களாக இருக்க வேண்டுமெனவும் இவ்விரு சந்தேக நபர்களையும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையொப்பிமிட வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் சிறுமிக்கு சூடு வைத்து சிறுமியை கொடுமைப்படுத்திய குறித்த சிறுமியின் வளர்ப்புத்தாய்க்கு எவரும் பிணை நிற்பதற்கு முன்வராததால் அவர் தொடர்ந்து மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்க மறியலில் இருந்து வந்த நிலையில் நேற்று(7.6.2016) இவருக்குரிய பிணைக்காக இரண்டு அரசாங்க உத்தியோகத்தர்கள் உட்பட நான்கு பேர் முன் வந்து பிணை நின்றதையடுத்து இவர் பிணையில் விடுதலையாகியதாகியதாக தெரிய வருகின்றது.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி6ம் குறிச்சி அப்துல் ஜவாத் ஆலிம் வீதியில் சிறுமியொருவருக்கு அவரது வளர்ப்புத்தாய் நெருப்பினால் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை மௌலவி எம்.ஏ.மஜீத் ரப்பாணி என்பவரும் மற்றும் அவரது மனைவி சிறுமியின் வளர்ப்புத்தாய் திருமதி மும்தாஜ் ஆகிய இருவரும் காத்தான்குடி பொலிசாரினால் கடந்த 13.3.2016 அன்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY