இராணுவத் தலையீட்டை நிறுத்தக் கோரி கிராம சேவையாளர்கள் ஆர்ப்பாட்டம்

0
136

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்கள்பபு மாவட்டத்தில் இராணுவத் தலையீட்டை நிறுத்தக் கோரி மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகஸ்தர்கள் புதனன்று 08.06.2016 பிரதேச செயலகங்கள் தோறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிரான் பிரதேச செயலகப் பிரிவில் கடமையில் ஈடுபட்டிருந்த கிராம சேவை உத்தியோகஸ்தர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டமைக்கு எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளியிட்டு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்களுக்கும் புதன்கிழமை கடமைக்கு வந்த கிராம சேவை உத்தியோகஸ்தர்கள் கறுப்புப் பட்டியணிந்து வருகை தந்திருந்தனர்.

இராணுவத்தினரே கிராம உத்தியோகஸ்தர்களின் கடமையில் தலையிடாதே, வேண்டும், வேண்டும் நீதி வேண்டும், நல்லாட்சி அரசே எமது பாதுகாப்பபை உறுதி செய்து நீதியை நிலைநாட்டு, இன்னும் தொடர்கிறதா உங்கள் அடாவடித்தனம் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு பிரதேச செயலகங்களின் நுழைவாயில்களில் நின்று கொண்டு கிராம சேவையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1df75f41-0998-4b54-bd94-838c57d3c216

6dea1b61-d10f-4499-acfd-1b923e04df30

9d308a60-1cc1-45a7-8412-5791e223a232

45f3d223-c17a-4a6b-b30a-f71f27b81a86

4026c7c0-4095-4655-b9bc-8a68738678e9

36654b09-547c-4ee9-a8d8-3b0df6d5c88e

LEAVE A REPLY