ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை

0
125

7wessels_lumbரோயல் லண்டன் ஒருநாள் கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இடம்பெற்று வருகின்றது.

இதில் நொட்டிங்கமில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பகலிரவு போட்டியில் முதலில் ஆடிய நொட்டிங்காம்ஷைர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 445 ஓட்டங்களைக் குவித்தது.

முதல் விக்கெட்டுக்கு மைக்கல் லம்ப் (184 ஓட்டங்கள்), ரிக் வெஸ்செல்ஸ் (146 ஓட்டங்கள்) ஜோடி 342 ஓட்டங்களைக் குவித்து சாதனை படைத்தது.

இங்கிலாந்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும். இதற்கு முன்பு 1999 ஆம் ஆண்டில் உலக கிண்ண போட்டியில் டொன்டனில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் ராகுல் டிராவிட் கங்குலி ஜோடி 318 ஓட்டங்களை எடுத்ததே சாதனையாக இருந்தது.

அத்துடன் நொட்டிங்காம்ஷைர் அணியால் பெறப்பட்ட ஓட்ட எண்ணிக்கையானது ஒருநாள் வரலாற்றில் ஒரு அணியால் பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும். 2007 ஆம் ஆண்டில் சர்ரே அணி 496 ஓட்டங்கள் குவித்ததே அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும்.

2015 ஆம் ஆண்டு நடந்த உலகக்கிண்ண போட்டியில் சிம்பாவேக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் கெய்ல் – சமுவேல்ஸ் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 372 ஓட்டங்களைக் குவித்ததே ஒருநாள் போட்டியில் அதிகபட்ச இணைப்பாட்ட சாதனையாகும்.

பின்னர் ஆடிய நொர்த்தம்டன்ஷைர் அணி 48.2 ஓவர்களில் 425 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 870 ஓட்டங்களை குவித்தன. இன்னும் 2 ஓட்டங்களை பெற்றிருந்தால் இருந்தால் உலக சாதனை படைத்து இருக்க முடியும்.

2006 ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து 872 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதே உலக சாதனையாக உள்ளது.

LEAVE A REPLY