மெக்சிகோவில் கடலுக்கு அடியில் கடும் நிலநடுக்கம்

0
93

201606081100132651_earthquake-on-the-seabed-in-Mexico-people-running-in-panic_SECVPFதென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் தெற்கு பசிபிக் கடற்கரை பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டரில் 6.2 ஆக நில நடுக்கம் பதிவானது. ஜலிஸ்கோ என்ற இடத்தில் கடலுக்கு 105 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அதையடுத்து பீதி அடைந்த மக்கள் தெருக்களில் உள்ள சாலைகளில் ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.

கடலுக்குள் நில நடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து கடலில் உயரமான அலைகள் எழும்பின. இருந்தாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கவில்லை.

நில நடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்தும், பொருட்சேதம் குறித்தும் உடனடியாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

LEAVE A REPLY