லோர்ட்ஸில் விளையாட சந்தர்ப்பம் கிடைப்பது மகிழ்ச்சி – குசால் பெரேரா

0
79

kusal_CIஇங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் விளையாட சந்தர்ப்பம் கிடைப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை அணியின் குசால் பெரேரா தெரிவித்துள்ளார். தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியதாகத் தெரிவித்து குசாலுக்கு போட்டித் தடை விதிக்கப்பட்டிருந்தது. நீண்ட விசாரணைகளின் பின்னர் போட்டித் தடை அண்மையில் நீக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி வீரர் சானக்க வெலகெதர உபாதைக்கு உள்ளாகியதனைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு குசால் பெரேரா அழைக்கப்பட்டார்.

எனினும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் அவர் விளையாடவில்லை. நாளை ஆரம்பமாகவுள்ள லோர்ட்ஸ் போட்டியில் குசால் பங்கேற்பார் என அறிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY