(Photo) வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் புகையிரதத்துடன் டிப்பர் ரக வாகனம் மோதி விபத்து

0
18

(முஹமட் அஷ்பாக்)

dvvவாழைச்சேனை பொலீஸ் பிரிவிற்குட்பட்ட பொத்தானை எனும் பகுதியில் மண் ஏற்றுவதற்காக சென்ற டிப்பர் ரக வாகனமொன்று புகையிரதத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து இன்று (08) புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் டிப்பர் ரக வாகன சாரதி ஆபத்தான நிலையில் காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்தில் சிக்குண்ட டிப்பர் ரக வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் புகையிரதத்திற்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என தெறியவந்துள்ளது.

மேலதிக வசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

dfdf

dfdfdf

fdfdf

 

LEAVE A REPLY