இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக உள்ளது என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள்!

0
483

nSRFsm7u800x480_IMAGE54129319தற்போது இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதில் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் நிலையைத் தான் ஹைப்பர் க்ளைசீமியா என்று அழைப்பர். ஒருவரது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானால், அதனால் உயிருக்கே உலை வைக்கும்படி சிறுநீரகம், மூளை, கண்கள், கால்கள், பாதம் போன்றவை பாதிக்கப்படும்.

ஆகவே ஒருவர் தங்களது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அவ்வப்போது பரிசோதித்துப் பார்க்க வேண்டும். குறிப்பாக வயது அதிகரிக்கும் போது இரத்த சர்க்கரை அளவை பரிசோதிப்பது மிகவும் அவசியம். இங்கு ஒருவரது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் தென்படும் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒருவரது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, அதனால் உடல் வறட்சி அடையக்கூடும். உடல் வறட்சி அடைய ஆரம்பித்தால், அதன் முதல் அறிகுறியாக வாய் வறட்சி அதிகமாக இருக்கும். எனவே வாய் வறட்சி அதிகமாக இருந்தால், சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள்.

உடல் வறட்சி அடைய ஆரம்பித்தால், அதனால் தாகமும் அதிகம் எடுக்கும். ஆகவே உங்களுக்கு சாதாரணமாக தாகம் எடுப்பதை விட, அதிகமாக தாகம் எடுத்தால், உங்கள் உடலில் சர்க்கரையின் அளவு அதிகம் உள்ளது என்று அர்த்தம்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருக்கும் போது, மிகுந்த சோர்வையும், எதையும் செய்ய முடியாத அளவில் உடல் பலவீனத்துடன் இருப்பதை உணரக்கூடும்.

அடிக்கடி தலைவலி வந்தால், அதற்கு ஓர் காரணம் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் போது, நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக தலைவலியை உண்டு பண்ணும்.

தலைவலி மற்றும் மங்கலான பார்வை ஆகிய இரண்டும் ஒரே சமயத்தில் இருந்தால், இரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.

அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றுகிறதா? இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் தான், அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும்.

LEAVE A REPLY