மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 6.2 ஆக பதிவு

0
123

201606071924044735_Twin-earthquakes-of-62-magnitude-strike-off-west-coast-of_SECVPFமெக்சிகோ நாட்டின் மேற்கு கடற்கரையில் சக்தி வாய்ந்த இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் முறையே 6.2 மற்றும் 5.5 ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவானது. முதல் நிலநடுக்கம் சான் பார்ட்சியோ நகரத்தில் இருந்து 93 கிலோ மீட்டர் தொலைவிலும், இரண்டாவது நிலநடுக்கம் அதே நகரத்தில் இருந்து 91 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து மெக்சிகோவில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கோலிமா கடற்கரை ஓரம் உள்ள பகுதிவாசிகள் பத்திரமான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அப்பகுதியில் அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர். கோலிமாவில் உள்ள கட்டிடங்கள் அதிர்ந்ததாக பொதுமக்கள் கூறியுள்ளனர். எனினும், அப்பகுதியில் ஏற்பட்ட சேதம் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY