திருமலை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு சுகாதார பிரதி அமைச்சரினால் நிதி ஒதுக்கீடு

0
208

(M.T. ஹைதர் அலி)

3திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிண்ணியா தள வைதியசாலைக்கு 2414 மில்லியன் ரூபாவும், மூதூர் தள வைத்தியசாலைக்கு 1280 மில்லியன் ரூபாவும், தோப்பூர் பிரதேச வைத்தியசாலை 435.5 மில்லியன் ரூபாவும் மற்றும் புல்மோட்டை தள வைத்தியசாலைக்கு 605 மில்லியன் ரூபா (61.5 கோடி) நிதி ஒதுக்கீடும் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிமினால் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், குச்சவெளி பிரதேச வைத்தியசாலை, கோமரன் கடவல வைத்தியசாலை, பதவி ஸ்ரீ புர வைத்தியசாலை மற்றும் கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலைகளுக்கான மதிப்பீடுகளை அவசரமாக தயாரிக்கும்படி அமைச்சரினால் பணிப்பாளருக்கு வேண்டுகோள்விடுக்க இன்னும் சில தினங்களில் அவைகளுக்கான வேலைத்திட்டங்கள் முடிக்கபட்டு ஒப்படைக்கப்படும் என பணிப்பாளர் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஆகியோரினால் பதில் அளிக்கபட்டதோடு, குறித்த வைத்தியசாலைகளுக்கான வேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்நிதி ஒதுக்கீட்டினை மாகாண சுகாதார அமைச்சுடன் இணைந்து நடை முறைப்படுத்தும் கலந்துரையாடல் நேற்று (06) காலை 10 மணியளவில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீரின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண சுகாதார பணிமனையின் கேட்போர் கூடத்தில் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீமின் தலைமையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர் மற்றும் லாகிர் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு. கருணாகரன் பணிப்பாளர் திரு. முருகானந்தம் கிழக்கு மாகாணத்திலுள்ள நான்கு பிராந்திய பணிப்பாளர்கள், பொறியியலாளர்கள் மற்றும் கணக்காளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டு வேலைத்திட்டங்களை உடன் அமுல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கபட்டன.

புல்மோட்டை பிரதேச வைத்தியசாலைக்கான நிதி ஒதுக்கீடுகள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வரின் வேண்டுகோளின் அடிப்படையில் அமைச்சரின் வருகையின்போது முன்வைக்கபட்டதோடு ஏனைய பிரதேச வைத்தியசாலைகளுக்கான வேண்டுகோள்களை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர், லாகிர் மற்றும் முன்னாள் தவிசாளர் எச்.எம். பாயிஸ் ஆகியோரால் முன்வைக்கபட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே, தனது வேண்டுகோள்களை ஏற்று நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்ட பிரதி அமைச்சர் பைசல் காசீமுக்கு மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் தெவிவித்து கொண்டார்.

1 4

LEAVE A REPLY