மிக மோசமான மைதானங்கள் இவை தான்! கெவின் பீட்டர்சன்

0
188

Ball Test Cricketஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான கெவின் பீட்டர்சன் கான்பூரின் Green Park Stadium மற்றும் அகமதாபாத்தின் Motera மைதானத்தினை உலகின் மிக மோசமான மைதானம் என விமர்சித்துள்ளார்.

இங்கிலாந்து வீரரான கெவின் பீட்டர்சன் டுவிட்டரில் அவரது ரசிகர்களிடம் உரையாடும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

தான் விளையாடிய மைதானங்களில் கான்பூரின் Green Park Stadium மற்றும் அகமதாபாத்தின் Motera மைதானம், Guyana, Manchester’sOld Trafford உலகிலேயே மிக மோசமான மைதானங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மும்பை வான்கடே மைதானம் தான் விளையாடி மைதானங்களிலேயே சிறந்தது என தெரிவித்துள்ளார்.

வான்கடே மைதானத்தில் கடந்த 2012ம் ஆண்டு நடந்த போட்டியில், 186 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர ஓவல், அடிலெய்ட், டிரினிடாட், MCG மைதானங்களையும் சிறந்தது என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY