கொஸ்கம விபத்தில் பாரியளவில் இராணுவ ஆவணங்கள் அழிந்துள்ளன

0
93

kosgamaகொஸ்கம சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் பாரியளவில் இராணுவ ஆவணங்கள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இராணுவத்தின் தன்னார்வ படைப்பிரிவு ஆவணங்களே பாரியளவில் அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 70,000 படைவீரர்களின் பிரத்தியேக ஆவணக் கோவைகள் முற்று முழுதாக தீக்கிரையாகியுள்ளன.

இந்த ஆவணங்களை மீள பெற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்படுகிறது. 1881ம் ஆண்டு இலங்கை தன்னார்வ படைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY