மாலத்தீவு முன்னாள் துணை அதிபருக்கு 10 ஆண்டு சிறை

0
96

201606070913519949_10-year-jail-sentence-for-former-Vice-President-of-Maldives_SECVPFகடந்த ஆண்டு மே மாதம், எதிர்க்கட்சி பொதுக்கூட்டத்தை கைத்துப்பாக்கியால் குறி பார்த்ததாக மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் மீது வழக்கு தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப். 34 வயதான இவர், அதிபர் அப்துல்லா யாமீனுக்கு நெருக்கமானவராக இருந்தார். அதிபரின் படகை வெடிவைத்து தகர்க்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில், அவரது பதவி பறிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த ஆண்டு மே மாதம், எதிர்க்கட்சி பொதுக்கூட்டத்தை கைத்துப்பாக்கியால் குறி பார்த்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. மூடிய அறைக்குள் நடத்தப்பட்ட விசாரணையில், அகமது அதீப் குற்றவாளி என்று நேற்று முன்தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய போவதாக அவருடைய வக்கீல் மூசா சிராஜ் தெரிவித்தார்.

LEAVE A REPLY