வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட கொலன்னாவ பிரதேச குடும்பங்களுக்கு முஸ்லிம் எய்ட் 750 உலர் உணவு பொதிகள்

0
152

(அஸீம் கிலாப்தீன்)

6254fc10-a4fd-4311-81ed-4dd60702199cவெள்ள நீர் வடிந்து விட்ட போதிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைமை இன்னமும் முன்னய நிலைமைக்குத் திரும்பவில்லை. அன்றாடம் கூலித்தொழில்கள் மூலம் தமது வருமானத்தைப் பெறுகின்ற குடும்பங்களின் நிலையோ இன்னமும் மோசமானதாக உள்ளது.

அவ்வாறு பாதிக்கப்பட்ட பகுதிகளான மெகட கொலன்னாவ அபூபக்கர் மஸ்ஜித் மஹல்லாவைச் சேர்ந்தமக்களுக்கு 450 உலர் உணவுப் பொதிகளையும், பலூலியா மஸ்ஜித் மஹல்லாவைச் சேர்ந்த மக்களுக்கு 300 உலர் உணவுப் பொதிகளையும் முஸ்லிம் எய்ட் நேற்று 6ம் திகதி மாலை வினியோகம் செய்தது. முஸ்லிம் எய்ட் பணியாளர்கள், இக்ராம் இஸாக், அஸ்மி ஆகியோருடன் மௌலவி நாளீர்,  சமய சமூகத்தலைவர்கள் வினியோக நிகழ்வில் பங்கேற்றனர்.

தவிர, ஹாமதுருவத்த பகுதியைச் பராவுல் இமாம் பள்ளி மஹல்லாவைச்சேர்ந்த குடும்பங்களுக்கு 250  உலர் உணவுப்பொதிகள் நாளை முஸ்லிம் எய்ட்இனால் வினியோகிக்கப்படவுள்ளது.

இப்பிரதேசமக்களுக்கு இது வரை உலர் உணவு ஏதும் வினியோகிக்கப்படவில்லை என்பதுடன் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இப்பகுதிகளில் வாழ்வோர் பெரும்பாலும் நாளாந்த கூலித்தொழிலை தமது வருவாய் மூலமாகக் கொண்டவர்களாகும். மேலும், இப்பகுதிகளிலுள்ள குடும்பங்களின் சமையல் பாத்திரங்கள் அனைத்தும் வெள்ளத்தினால் அள்ளிச் செல்லப்பட்டுவிட்டன.

இது வரை சமையலறை உபகரணங்கள் ஏதும் கிடைக்கவில்லை எனவும் தற்போது கிடைத்துள்ள உலர் உணவுகளை சமைத்து உண்ண தமக்கு சமையலறை உபகரணங்கள் உடனடித் தேவையாக உள்ளதெனவும் மக்கள் தெரிவித்தனர்.

இன மத வேறுபாடுகள் இன்றி முஸ்லிம் எய்ட் மேற்கொண்டு வரும் சேவைகளுக்கு மூவின சமூகங்களைச் சேர்ந்த மக்களும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

3f6e9423-2647-420e-97a4-06d1b76d4b41

5f59f406-0c5c-405c-9e40-a84aa3115262

6bea21fd-b9be-4569-8d56-1db6a111a2ad

6254fc10-a4fd-4311-81ed-4dd60702199c

c0707927-8092-4a3e-a269-6d89c2304254

cbcbe910-597b-4e2b-a4bd-9f809187a546

ecd9908f-ff5a-40f3-aeff-a976e3a1a3b9

ffcd32fb-617c-4f0a-be0a-48912a7f444d

LEAVE A REPLY