சலாவ இராணுவ முகாமை ஆகாயத்திலிருந்து பார்த்தால்…

0
586

salawa army campகடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியசாலையில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றதோடு, இதனால் பாரிய அளவில் தீப்பரவல் ஏற்பட்டது. எனவே, அப் பகுதியில் இருந்த குடியிருப்பாளர்கள் வௌியேற்றப்பட்டனர்.

இந்தநிலையில், இந்த விபத்து காரணமாக ஒரு இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதோடு, மற்றொரு இராணுவ சிப்பாய் காயமடைந்துள்ளார்.

மேலும், அங்கிருந்த ஆயுதங்கள் அருகிலிருந்த வீடுகளுக்குள்ளும் விழுந்துள்ளதோடு பெரும் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும், தற்போது நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், குறித்த இராணுவ முகாமுக்கு ஒரு கிலோமீற்றருக்குள் இருக்கும் குடியிருப்பாளர்கள் தவிர்த்து ஏனையோர் மீளவும் குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினரின் பணிப்புரைக்கு அமைய ஏனையோரையும் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடுப்பிலி தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், வான் வழியாக சென்று எடுக்கப்பட்ட குறித்த இராணுவ முகாமின் படங்களை மேலே காணலாம்..!

#Adaderana

Kosganda

LEAVE A REPLY