முகாமை அண்மித்த பகுதியில் வசிப்போருக்கு சுவாச சிக்கல் ஏற்படலாம்!

0
121

Dr Palitha Mahipalaகொஸ்கம இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிவிபத்தினால் இந்த இராணுவ முகாமை அண்மித்த பகுதியில் உள்ளவர்களுக்கு சுவாசிப்பதில் சிக்கல் ஏற்படக்கூடிய நிலைமை இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்தார்.

இந்தப் பகுதிகளுக்கு வைத்தியர்கள் அனுப்பப்பட்டு அங்கு வசிக்கும் மக்களின் சுகாதார நிலைமைகளை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், வெடிவிபத்து ஏற்பட்டு சில நிமிடங்களிலேயே அவிசாவளை, கரவனல்ல, ஹோமாக ஆகிய இடங்களில் உள்ள வைத்தியசாலைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகவும், விபத்து ஏற்பட்ட இடத்திற்கு 27 அம்பியூலன்ஸ் வண்டிகள் அனுப்பப்பட்டிருந்ததாகவும் கூறினார். இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதுடன், 8 பேர் சிறிய காயங்களுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதில் இருவர் அவிசாவளை வைத்தியசாலையிலும், ஐவர் கரவனல்ல வைத்தியசாலையிலும், ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டனர். ஒருவர் மாத்திரம் உயிரிழந்திருப்பதுடன், காயமடைந்த ஐவர் மாத்திரமே இன்னமும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுட்டிக்காட்டிய அவர், அவிசாவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஐவரைத் தவிர ஏனையவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதனைவிட 39 பேர் சுவாசிப்பத்தில் ஏற்பட்ட சிக்கல் நிலைமை காரணமாக வைத்திசாலையில் சிகிச்சை பெற்று உடனடியாக வீடு திரும்பியுள்ளனர்.

இந்தப் பகுதிகளில் சுவாசிப்பதில் சிக்கல் ஏற்படக்கூடிய நிலைமை காணப்படுகிறது. முகாமை அண்டித்த பகுதிக்குள் செல்வதற்கு அனுமதி கிடைத்ததும் சுகாதாரக் குழுவினர் சென்று நிலைமைகளை ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY