துருக்கி: பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து 6 குழந்தைகள் உள்பட 14 பேர்

0
128

imageதுருக்கி நாட்டில் தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்றபோது விபத்தில் சிக்கி பேருந்து ஆற்றில் விழுந்ததில் 14 பேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கியில் சேர்ந்த காரபிடி நகர தனியார் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என 40 பேர் நேற்று கல்வி சுற்றுலா சென்றுவிட்டு கல்லூரிக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, பேருந்து ஓஸ்மானியே என்ற நகருக்கு அருகில் வந்து கொண்டு இருந்த போது பஸ் ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து ஒரு பாலத்தின் சுவரை உடைத்துக்கொண்டு பேருந்து ஆற்றில் பாய்ந்துள்ளது.

ஆனால், இந்த விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 14 பேர் பலியாகியுள்ளனர். படுகாயம் அடைந்த 26 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY