(Poem) தடுமாற்றமில்லாத தலைப் பிறை

0
20

(மதியன்பன்)

13383770_10206841604144308_995384307_oதலைப்பிறை தேட
தடுமாறுகின்றவர்கள்
இம்முறை
பிறையின் பெருப்பம் கண்டு
பேதலித்து நிற்கிறார்கள்

சில வினாடிகள்
கண் சிமிட்டும் தலைப்பிறை
இம்முறை
பல நிமிடங்கள்
பாய் விரித்துப் படுத்திருக்கிறது

எழுதி வையுங்கள்
இலங்கை வரலாற்றில்
இப்படியொரு தலைப்பிறையை
எல்லோரும் கண்டதாக …

நாட்டின் நாலாபுறமும்
தலைப்பிறையை
கூட்டாகக் கண்டு
குதூகலித்திருக்கிறார்கள்
குடும்பம், குடும்பமாக …

பெரிய பள்ளியில்
பிறை பார்க்கக் கூடியவர்கள்
தொலைபேசியின்
தொல்லை தாங்க முடியாமல்
விசனத்துடன்
வெளியேறியிருக்கிறார்கள்

காவாவும், சமுசாவும்
அங்கே
காத்துக் கிடப்பதாக
கடைசியாக கிடைத்த தகவல் …

எக்காலமும்
ஏமாற்ற முடியாதென்பதை
ஒரு காலம்
உணர்த்தும் என்பதே உண்மை

LEAVE A REPLY