(Poem) குடும்பக் கொடுமைகள்

0
25

(நிஷவ்ஸ்)

குடும்பங்களில் நடக்கின்ற
கொடுமைகளைக் கண்டால்
அடிமனதில் சோகத்துடன்
ஆத்திரமும் கலந்து வரும்.

ஒண்டுமே செய்யாது
உட்கார்ந்து இருந்த படி
கொண்டு வந்த சீதனத்தில்
குடும்பம் நடத்தி விட்டு
எல்லாம் முடிந்து போக
இருப்பவளை வதைக்கின்றார்
செல்லு வாப்பாவிடம்
சீதனம் தரச் சொல்லு
இல்லாது போனால்
இப்போதே தலாக் செய்வேன்
முள்ளந் தண்டின்றி
முந்தானையை வதைப்போரும்
உள்ளனர் சமூகத்தில்
உருப்படுமா குடும்பங்கள்.

நாலு காசு சேர்ப்பதற்காய்
நாயாக அலைந்த பின்னால்
ஏழு மணி தாண்டியபின்
இரவு வரும் கணவனிடம்
ஊளை இடுகின்றார்
உள்ளதெல்லாம் கேட்கின்றார்
ஆளை வாட்டி எடுத்து
அதாபு கொடுக்கும் மனைவிமார்

மகன் இறந்த சோகத்திலும்
மருமகளின் விதவைக்கோலம்
சுகமாகத் தெரிகின்ற
சொர்ணாக்கா மாமிமார்
பகையுடன் மருமகளை
பாடாய்ப் படுத்துகிறார்
வகை வகையாய் வார்த்தைகளால்
வாட்டி எடுக்கின்றார்.

உம்மாக்கு அவன் கொடுத்தா
உடனே கோபித்து
பொம்பளையாய் இல்லாமல்
பொறுக்கி போல் வார்த்தைகளால்
தன் மாமி மனம் நோகத்
தாக்குகின்ற கொடுமைகள்
என்று முடியுமோ
இவர் மனம் திருந்துமோ?

நானாக்கும் தம்பிக்கும்
காணியால அடிதடி
நோனாக்கும் தங்கைக்கும்
வீணான சந்தேகங்கள்
சித்தியின் கொடுமைகளில்
சிக்கும் சிறு மலர்கள்
குத்துச் சண்டை மேடையாய்
குடும்பங்கள் சில இங்கு.

வாப்பாக்கு வயது போக
வளர்ந்த பிள்ளை விரட்டி விட
மூப்படைந்த பலர் இங்கு
முகவரி இல்லாமல்
சாப்பாட்டுக்கலைகின்றார்
சத்திரத்தில் வாடுகிறார்
ஏற்படலாம் அனர்த்தங்கள்
இந்தக் கொடுமைகளால்

LEAVE A REPLY