இன்று இலங்கையில் தென்பட்டது ரமழான் முதல் பிறைதானா?

1
237

முஹமட் அல்-நஹியான்

இன்று இலங்கையில் பார்க்கப்பட்ட ரமழான் பிறை முதல் பிறைதானா என்பதில் அதிகமானவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

நேற்று (05-06-2016) இந்தியா கேரளா மாநிலத்தில் தலைப்பிறை பார்க்கப்பட்டு நம்பகமான சாட்சிகள் மூலம் அது உறுதிசெய்யப்பட்டு சர்வேதேச பிறை அடிப்படையில் இலங்கையில் பல சகோதரர்கள் நோன்பு நோற்றது குறிப்பிடத்தக்கது.

இன்று (06-06-2016) இலங்கையில் மாலை தென்பட்ட ரமழான் தலைப்பிறை? சுமார் 30 தொடக்கம் 40 நிமிடங்கள் வரை வானில் மிகத்தெளிவாக இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் தென்பட்டது.

இன்று தென்பட்டது ரமழான் முதல் பிறை அல்ல என உள்ளூர் பிறையை சரி கானக்கூடிய பலர் சந்தேகம் கொள்கிறனர்.

தலைப்பிறை என்பது வானில் 5 தொடக்கம் 7 நிமிடங்கள் வரைதான் தென்படும் அவ்வாறு தென்படும் தலைப்பிறை எல்லா பகுதிகளிலும் தெளிவாக பார்க்க முடியாது என்பதை இலங்கை பிறை குழுவில் இணைந்து செயல்படும் வானியல் ஆராய்ச்சி குழு அண்மையில் கூறியமை குறிப்பிடக்கூடிய விடயம்.

ஆக இலங்கை பிறை குழுவின் வானியல் ஆராய்ச்சி பிரிவின் கருத்துப்படி இன்று இலங்கையில் தென்பட்டது இரண்டாவது பிறை என்பதை பாமர மக்கள் முதல் படித்தவர் வரை நம்புகின்றனர்.

உண்மை எப்போதாவது வெளிவந்தே தீரும் என்பது நிச்சயம்

அல்லாஹ்வே மிக அறிந்தவன்

13383492_10206841604064306_1623629356_o 13383770_10206841604144308_995384307_o 13383843_10206841603704297_1289568215_o 13405121_10206841603824300_91201995_o

1 COMMENT

  1. Mpttu raala neegga pora pokku nalla pureedhu
    Pora 36 minutes theriyum summa waay eekkira palikki naattayum uoorayum ogada kattu paattuku konduwara yealumdu mottu waakkula think panna waanam

LEAVE A REPLY