களுதாவளை மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம்

0
21

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

7ca3a074-351c-4726-8aed-92cb97fff11bமட்டக்களப்பு களுதாவளை மகாவித்தியாலயத்திற்கு புதிய அதிபர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பாடசாலையில் அதிபராக கடமை புரிந்த எஸ். அலேசியஸ் என்பவர் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளதையடுத்து இவ்வியத்தியாலயத்திற்கு புதிய அதிபராக களுதாவளைக் கிராமத்தைச் சேர்ந்த பே. காப்தீபன் நியமிக்கப்பட்டு திங்கட்கிழமை முதல் 06.06.2015 கடமைகளைப் பெறுப்பேற்றுக் கொண்டார்.

புதிய அதிபரை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே. சுகுணன், பாடசாலை ஆசிரியர்கள், அபிவிருத்திச் சங்கத்தினர், மாணவர்கள், பழைய மாணவர்கள் உட்பட அனவரும் ஒன்றிணைந்து வரவேற்றனர்.

வரவேற்பைத் தொடர்ந்து புதிய அதிபர் கடமையினைப் பெறுப்பேற்றுக் கொண்டார். களுதாவளை மகா வித்தியாலயத்தின் பழைய மாணவாரான இவர் இலங்கை கல்வி நிருவாக சேவையில் தரம் 3 இல் சித்தியெய்தி, கொழும்பு றோயல் கல்லூரியின் பிரதி அதிபராகக் கடைமை புரிந்து பின்னர் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகக் கடைபுரிந்துள்ளார்.

LEAVE A REPLY