சிதறிய வெடிக்காத வெடிபொருட்கள் எந்த வேளையிலும் வெடிக்கலாம்: இராணுவத் தளபதி!

0
130

625.0.560.320.160.600.053.800.668.160.90-620x330அவிசாவளை கொஸ்கம – சலாவ இராணுவ முகாமிலிருந்து ஒரு கிலோ மீற்றருக்கு வெடிக்காத வெடிபொருட்கள் சிதறியிருப்பதால், இவை வெடிப்பதற்கான சந்தர்ப்பம் அதிகமாக இருப்பதால் எவரையும் அந்த பகுதிக்கு வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ மற்றும் வெடிப்புச் சம்பவங்களினால் முகாமிலிருந்து சிதறிய பொருட்களை தொடுவதை தவிர்க்குமாறு இராணுவத்தினர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் இந்த அனர்த்தம் காரணமாக அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள், வீடுகள் என அனைத்தும் சேதமடைந்த நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ET-

LEAVE A REPLY