(Photos) தீ கட்டுப்பாட்டுக்குள்; முகாமுக்கு அருகாமையில் உள்ள வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு ஏற்பட்ட பாரிய சேதம்

0
30

13327519_1021359671253326_8130038524425625533_nஅவிசாவளை – கொஸ்கம – சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் காரணமாக ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக, இராணுவம் தெரிவித்துள்ளது.

நேற்று (05) மாலை 05.30 அளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த சம்பவத்தால் களஞ்சியசாலையில் இருந்த பாரிய குண்டுகள் உட்பட ஆயுதங்கள் சில அங்கிருந்த குடியிருப்பு பகுதிகளிலும் விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக அங்கிருந்த வீடுகள் சில பாரிய சேதத்துக்குள்ளாகியுள்ளன.

இதேவேளை, வெடிப்பு சம்பவம் ஏற்பட்டு சில நிமிடங்களிலேயே அப் பகுதியில் இருந்த மக்கள் வௌியேற்றப்பட்டதோடு, குறித்த இராணுவ முகாமுக்கு ஒரு கிலோமீற்றர் தூரத்துக்கு அப்பாலுள்ள குடியிருப்புக்களில் மாத்திரம் மக்கள் மீண்டும் வரலாம் என, இன்று காலை இராணுவம் அறிவித்தது.

இந்தநிலையில், அப் பகுதியில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பின் அவற்றை தீண்டாது, உடன் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்குமாறு இராணுவம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, இவ்வாறான சந்தேகத்திற்கிடமான பொருட்களைக் காண்பவர்கள் 011 3 81 86 09 அல்லது 011 2 43 42 51 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாம்.

எதுஎவ்வாறு இருப்பினும், ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக அவிசாவளை வீதியின் வாகனப் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி அவ் வீதியால் அவிசாவளையில் இருந்து வரும் வாகனங்களை கொஸ்கம வரையிலும் கொழும்பில் இருந்து வரும் வாகனங்கள் ஹங்வெல்ல நகர் வரையிலும் மட்டுப்படுத்த, பாதுகாப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், இந்த விபத்தால் ஒரு இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ளதோடு, 8 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், சிறு உபாதைகளுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 39 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, விபத்து இடம்பெற்ற பகுதியைப் பார்வையிட அமைச்சர் சாகல ரத்நாயக்க சென்றிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாக அவர் இதன்போது கூறியுள்ளார்.

மேலும், சலாவ இராணுவ முகாம் பகுதியில் தீப்பரவல் காராணமாக ஏற்பட்ட புகையினை சுவாசிப்பதைத் தவிர்க்குமாறும், அப் பகுதிக்கு செல்பவர்கள் துணியால் முகத்தை மூடிக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

13312710_1021359514586675_1140822135596070271_n 13315227_1021359604586666_1699626790842267275_n 13315655_1021359484586678_2290826440735601520_n 13331104_1021359501253343_7034492604497292717_n 13335728_1021359814586645_5866670886176505610_n 13339555_1021359601253333_6628801422586591022_n 13339667_1021359571253336_4068806646570608630_n 13346937_1021359627919997_8994564715558756076_n

LEAVE A REPLY