காங்கேயனோடை அல் அக்ஸா வித்தியாலயத்திற்கு சிப்லி பாறூக் விஜயம்

0
167

(M.T. ஹைதர் அலி)

மட்டக்களப்பு மாவட்டத்தின், காங்கேயனோடை அல் அக்ஸா வித்தியாலயத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் பாடசாலையின் அபிவிருத்தி மற்றும் மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

இதன் போது மாணவர்கள் பயன்படுத்துகின்ற தளபாடங்கள் மிகவும் சேதமடைந்து நிலையில் காணப்படுவதாகவும், மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மிகவும் சிரமத்திற்குள்ளாகுவதாகவும் பாடசாலை நிருவாகத்தின் சார்பில் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக்கிக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

அதனை கருத்திற்கொண்ட மாகாண சபை உறுப்பினர் தனது சொந்த நிதியிலிருந்து சேதமடைந்த நிலையிலுள்ள தளபாடங்களை திருத்தி தருவதாக வாக்குறுதியளித்தார்.

தான் வழங்கிய வாக்குறுதிக்கமைவாக காங்கேயனோடை அல் அக்ஸா வித்தியாலயத்தின் சேதமடைந்த நிலையில் காணப்பட்ட தளபாடங்களை தனது சொந்த நிதியிலிருந்து திருத்தியமைத்து அண்மையில் மாணவர்களிடம் கையளித்தார்.

9fa82021-8c3f-4786-bee0-5325fe72cb1f

19e09c57-b9ec-45b6-8a3b-81eb520e04ca

93a7ab51-7253-4c97-9ee2-b6fe5f5a760f

d76c3308-d7db-4ac6-916e-0efafacefc25

LEAVE A REPLY