நைஜீரியாவில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 32 பேர் பலி

0
86

police_fightநைஜீரியாவில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர். போகோ ஹாராம் தீவிரவாத அமைப்பிற்கும் நைஜீரிய படையினருக்கும் இடையில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோதல் சம்பவத்தில் 32 நைஜீரிய படையினர் படையினர் உயிரிழந்துள்ளனர்.

நைஜீரிய எல்லைப் பகுதியான போசோவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. படையினர் மீள் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் போகோ ஹாராம் தீவிரவாதிகள் உயிரிழந்தும் காயமடைந்தும் உள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் உயிரிழப்பு பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து போகொ ஹாராம் இதுவரையில் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.

LEAVE A REPLY