உலக சுற்றாடல் தின நிகழ்வு வாழைச்சேனையில் ….

0
148

(வாழைச்சேனை நிருபர்)

உலக சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட சுற்றாடல் அதிகார சபை அலுவலகமும் கோறளைப்பற்று பிரதேச சபையும் இணைந்து இன்று பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டது.

கோறளைப்பற்று பிரதேச சபை நூலகத்தில் பழ மரக்கன்றுகள் நடப்பட்டதுடன் “வனஜீவராசிகளை சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்கு எதிராக எழுவோம்.” என்ற தொனிப் பொருளில் வாழைச்சேனை இந்து கல்லூரி மாணவர்கலாள் வீதி நாடகமும் வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக நடித்துக் காட்டப்பட்டது.

கோறளைப்பற்று பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் திருமதி எஸ்.தட்சாயினி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் எஸ்.சிஹாப்தீன், சுற்றாடல் உத்தியோகத்தர் ஏ.ஜே.எம்.முயிஸ், கோறளைப்பற்று பிரதேச சபை நூலகர் கே.ருத்ரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

30a461d6-7ffc-471f-8de8-c47860d0d4d8

325e2e25-140f-4298-a52d-0179fef79628

97585365-f335-40c3-bc97-b5daba6a54a9

a6480d81-8999-4b75-a7d4-952d4936769a

LEAVE A REPLY