பிரான்ஸில் சாகசம் செய்த பாராசூட் வீரர் மின் கம்பியில் மோதி பலி

0
169

பிimageரான்ஸில் சாகச நிகழ்ச்சி செய்த வீரர் மின் கம்பியில் மோதி உடல் கருகி பலியானார்.

பிரான்சில் செம்பேரி பகுதியில் பாராசூட் சாகச நிகழ்ச்சி நடந்தது. அதை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். அப்போது அதில் பங்கேற்ற 38 வயது வீரரின் பாராசூட் திடீரென செயலிழந்தது.

இதனால் நிலை தடுமாறிய அவர் காற்றின் வேகத்தில் பறந்து சென்றார். ஒரு கட்டத்தில் அவரது பாராசூட் 20 ஆயிரம் வோல்ட் உயர் மின்னழுத்த கம்பியில் மோதியது.

அதை தொடர்ந்து அந்த வீரர் சுமார் 30 அடி தூரத்தில் தூக்கி வீசப்பட்டார். உடனே அவரை மீட்க பொது மக்கள் மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் மருத்துவ குழுவுடன் அங்கு விரைந்து வந்து, வீரரை பரிசோதித்த மருத்துவ குழு அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

உயர் மின்னழுத்த கம்பியில் மோதி தூக்கி வீசப்பட்டதாகவும் மின்னழுத்தம் தந்த அதிர்ச்சியால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY