கல்முனை மாநகர சபையில் கணக்காளர், பொறியியலாளருக்கு பிரியாவிடை வைபவம்

0
182

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபையின் கணக்காளர் எச்.எம்.எம்.றஷீட், கிழக்கு மாகாண சபையின் பிரதம கணக்காய்வாளராகவும் சிரேஷ்ட வேலைகள் அத்தியட்சகர் எம்.ஐ.அப்துல் மஜீத் அக்கரைப்பற்று மாநகர சபைக்கு பொறியியலாளராகவும் பதவியுயர்வு பெற்றுச் செல்வதையிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட பிரியாவிடை வைபவம் நேற்று சனிக்கிழமை (04) நடைபெற்றது.

மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தலைமையில், நிதி உதவியாளர் யூ.எல்.எம்.ஜௌபரின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகர சபையின் பொறியியலாளர் சர்வானந்தன், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஆரிப், முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.எம்.இஸ்மாயில், ஆசியா பவுண்டேஷன் தொழில்நுட்ப ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் ஆகியோர் வாழ்த்துரைகளை நிகழ்த்தினர்.

இதன்போது மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பரின் சார்பில் அவரது பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக், இருவருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கி வைத்தார். மாநகர சபை ஊழியர்கள் சார்பான பண முடிப்பை ஆணையாளர் லியாகத் அலி மற்றும் பொறியியலாளர் சர்வானந்தன் ஆகியோர் வழங்கி வைத்தனர். அத்துடன் பகல்போசன விருந்துபசாரமும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாநகர சபையின் பதில் சட்ட அதிகாரி எம்.பி.எம்.பௌசான், உள்ளூராட்சி உதவியாளர் முஹம்மட் சர்ஜூன் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் பங்கேற்றிருந்தனர்.

0a0c1fe3-1a0c-4a8b-b6a3-6bf19d486f71

80171b1c-d7cb-48df-bc77-474f608a1f30cb0953e7-5709-4b12-a553-442c5c15684f

dff3f4a4-c526-4101-b947-55651df22224

LEAVE A REPLY