கினிகத்தேன ஹட்டன் பாதை போக்குவரத்து பாதிப்பு : பிரதேச மின்சாரம் தடை

0
94

3மரமொன்று முறிந்து வீழ்ந்ததனால் ஹட்டன் கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து சுமார் இரண்டு மணித்தியாலங்கள் தடைப்பட்டுள்ளது.

கினிகத்தேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிட்டவள பகுதியில் நேற்று பகல் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதுடன் மின் கம்பமும் உடைந்துள்ளது.

அதிக மழை காணப்பட்டபோதிலும் பிரதேச மக்களின் உதவியுடன் கினிகத்தேன பொலிஸார் முறிந்து வீழ்ந்த மரத்தினை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர் செய்துள்ளனர்.

மேலும் மின்கம்பம் உடைந்து வீழ்ந்த நிலையில், இன்று வரை பிட்டவள பிரதேசத்திற்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதுடன் மின் இணைப்பை வழங்குவதற்கான நடவடிக்கையில் கினிகத்தேன மின்சார சபையினர் ஈடுபட்டுள்ளனர்.

#Virakesari

4

LEAVE A REPLY