வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை 6000 டொன் கழிவுகள் அகற்றம்

0
1213

deputy minister faiser-musthafaவௌ்ள நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள கழிவுகளை அகற்றுவது தொடர்பான முன்னேற்றம் குறித்த அறிக்கையை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக, அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இதுவரை 6000 டொன் கழிவுகள் இவ்வாறு அகற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவம், பொலிஸார், சிவில் பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு ஆகியன இணைந்து, கடந்த புதன்கிழமை முதல் இந்த நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

வௌ்ள நிலைமையால் பாதிக்கப்பட்ட கொலன்னாவ, கொடிகாவத்தை, முல்லேரியா, கடுவளை மற்றும் பேலியகொட ஆகிய பகுதிகளில் கழிவுகளை அகற்றும் நடவடிக்கை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த நடவடிக்கைகளை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் பைசர் முஸ்தபா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

#Adaderana

LEAVE A REPLY