(Video) முக்கோண தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் வெற்றி

0
19

244537அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுஅணிகள் மோதும் முக்கோண ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் நேற்று ப்ரொவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

குறித்த போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதின.இதில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இதில் 4 விக்கட்டுக்களால் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய மேற்கிந்தியத் தீவுகள் அணி புள்ளிகள் பட்டியலில் 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 46.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றது. தென்னாபிரிக்க அணி சார்பில் ரிலி ரொசொவ் 61 ஓட்டங்களை அதிக பட்ச ஓட்டங்களாகப் பெற்றுக்கொண்டனர்.

https://www.youtube.com/watch?v=0Ur5DpH0DEo

சிறப்பாக பந்து வீசிய சுனில் நரைன் 27 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 48 .1 ஓவரில் 6 விக்கட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களைக் குவித்து வெற்றி அடைந்தது. இதில் மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய கிரன் பொலாட் ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்களைப் பெற்றார்.

LEAVE A REPLY