ஆண்டர்சன் எனது சாதனையை முறியடிப்பார்: மெக்ராத்

0
156

201606042032449802_Anderson-can-surpass-my-wickets-tally-in-Tests-McGrath_SECVPFஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத். தனது நேர்த்தியான வேகப்பந்து வீச்சு மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தவர். குறிப்பாக சச்சின் தெண்டுல்கரைக்கூட கலங்கடிக்கச் செய்தவர்.

இவர் டெஸ்ட் போட்டியில் 563 விக்கெட்டுக்கள் வீழ்த்தி உலகத் தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளார். முரளீதரன் 800 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். 708 விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஷேன் வார்னே 2-வது இடத்திலும், இந்தியாவின் அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 3-வது இடத்திலும் உள்ளனர்.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் 451 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இவர்களுக்கு அடுத்தப்படியாக உள்ளார். இவர் மெக்ராத் சாதனையை முறியடிக்க இன்னும் 112 விக்கெட்டுக்கள்தான் தேவை. இந்த விக்கெட்டுக்களை எடுத்து ஆண்டர்சன் தன் சாதனையை முறியடிப்பார் என்று மெக்ராத் கூறியுள்ளார்.

இதுகுறித்து மெக்ராத் கூறுகையில் ‘‘எனது சாதனையை ஆண்டர்சனால் நெருங்க முடியும். தொடர்ந்து நல்ல உடல்நிலையுடன் அவர் விளையாடினால், மிகவும் எளிதாக அவரால் 563 விக்கெட்டுக்களை வீழ்த்த முடியும். அத்துடன் என்னுடைய சாதனையையும் முறியடிப்பார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

ஆண்டர்சன் நேர்த்தியான பந்து வீச்சாளர். இதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அவர் பந்தை வேகமாகவும், அதிக அளவில் ஸ்விங் செய்யும்போதும் அவருடன் மற்ற பந்து வீச்சாளர்கள் மோதுவது மிகவும் கடினம். தற்போது அவர் 115 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார். இதுபோன்று ஒரு வேகப்பந்து வீச்சாளர் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடுவது விதிவிலக்கானது. தற்போது வரை அவர் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுக்களை வீழ்த்துகிறார்’’ என்றார்.

LEAVE A REPLY