தேசிய மட்டத்துக்கு தெரிவாகியது. பாலமுனை அல் அறபாத் இளஞைர் கழகம்

0
137

(இஜாஸ் ஜபீர்)

FB_IMG_1465099993297தேசிய இளைஞர் விளையாட்டு விழா ஆரம்பமாக இருக்கையில் அதற்கான இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கில் மாவட்ட மட்ட இளைஞர் விழா 2016க்கான விளையாட்டு நிகழ்ச்சிகளின் குழு நிலைப் போட்டிகள் தற்போது அம்பாறை மாவட்ட இளைஞர் சம்மேளத்தின் ஏற்பாட்டில் நடந்து வருகின்றது.

இதில் மாவட்ட மட்ட குழு நிலை போட்டிகளில் ஒன்றான எல்லே விளையாட்டு போட்டி நேற்று (04) நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்தில் பாலமுனை, தமன, திருக்கோவில், கல்முனை, அம்பாறை போன்ற பிரதேசங்களை பிரதிநிதிப்படுத்திய அணிகள் பங்கு பற்றியது.

பல்லாயிரம் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாலமுனை அல் அறபாத் விளையாட்டு கழகம் 8 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்படுத்தாடிய கல்முனை தமிழ் விளையாட்டுக் கழகம் 2 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தனதாக்கியது.

வெற்றி பெற்ற பாலமுனை அல் அறபாத் விளையாட்டுக் கழகம் தேசிய மட்ட இளைஞர் போட்டிக்கு தெரிவாகியது.

இன்ஷா அல்லாஹ் தேசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற பாலமுனை மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

LEAVE A REPLY